சுவிட்சர்லாந்தில் மகளிர் தினக் கொண்டாட்டங்களால் ஏற்பட்ட இழப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் முன் அனுமதியின்றி நடத்தப்பட்ட மகளிர் தினக் கொண்டாட்டங்களால் 100,000 சுவிஸ் பிராங்குகள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சுமார் 1000 பேர் கலந்துகொண்ட மகளிர் தினப் பேரணி பொலிசாரின் முன் அனுமதியின்றி சூரிச் நகரில் நடத்தப்பட்டது.

வீடுகள் மற்றும் அலுவலகங்களின் சுவர்களில் ஸ்பிரே செய்யப்பட்ட பெயிண்ட், ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், வீசப்பட்ட பெயின்ட் குண்டுகள் ஆகியவற்றை சுத்தம் செய்வதற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டதில் சுமார் 100,000 சுவிஸ் பிராங்குகள் ஆகும் என்று தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் ஏன் இதைத் தடுக்கவில்லை என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பெண்களும் குழந்தைகளும் பேரணியில் அதிக அளவில் இருந்ததாகவும், அதிலும் தள்ளு வண்டியில் வைத்து கொண்டு செல்லப்பட்ட சிறு குழந்தைகள் அதிகம்பேர் இருந்ததாகவும் அதனால்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் வரும் ஆண்டில் பாதுகாப்பு அமைப்புகள் உதவியுடன் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்