கேலி கிண்டல்களை கடந்து சுவிஸ் அழகியாக தெரிவான மொடல்!

Report Print Harishan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் அழகியாக தெரிவாகியுள்ள இளம்பெண் தன் கனவு நிறைவேறியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் நாட்டின் அழகிகளுக்கான தெரிவு கடந்த சனிக்கிழமை(10/3/2018) அன்று நடைபெற்றுள்ளது.

அதில் நாட்டின் பல பிரபல அழகிகள் பங்கேற்றுள்ள நிலையில், இறுதிச் சுற்றுக்கு 18 முதல் 25 வயது வரையிலான பத்து பெண்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அந்த இறுதிச் சுற்றில் அனைவரையும் வீழ்த்தி சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த Jastina Doreen Riederer என்ற 19 வயது இளம்பெண் “Miss.Switzerland" பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.

வெற்றி பெற்ற அழகி, “என்னை நண்பர்கள் அனைவரும் Rapunzel என்று தான் அழைப்பார்கள். சிறுமியாக இருந்தபோது நீளமான என் முடியால் நிறைய கேலி கிண்டல்களை சந்தித்துள்ளேன். அதையெல்லாம் கடந்து நாட்டின் அழகியாக தெரிவாக வேண்டும் என்பது என் நீண்டகால லட்சியம். அது தற்போது நிறைவேறியுள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்