சுவிட்சர்லாந்தில் கடுமையாக்கப்படும் துப்பாக்கி விதிகள்: ஆதரவும் எதிர்ப்பும்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

இடது சாரி அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன நல மருத்துவர்கள் கொண்ட ஒரு குழு ஐரோப்பிய யூனியனைப் பின்பற்றி சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி விதிகளை கடுமையாக்கக் கோரும் அதே நேரத்தில், துப்பாக்கி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக நடத்தப்படவுள்ள விவாதம் ஒன்றிற்காக Social Democratic Partyயின் பிரதிநிதிகள், சுவிஸ் பொலிஸ் அதிகாரிகள் சங்கம் மற்றும் சுவிஸ் மன நல மருத்துவர்கள் கூட்டமைப்பு ஆகியவை கைகோர்த்துள்ளன.

கடந்த ஆண்டு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம், பாதுகாப்புக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவும் பாரீஸ் தீவிரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது போன்ற ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்காகவும் ஒரு திருத்தப்பட்ட துப்பாக்கி சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

அதேபோன்ற கடுமையான சட்டங்களை சுவிட்சர்லாந்திலும் அமுல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதம் நடைபெற உள்ளது. துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு ஆதரவு தெரிவிக்கும் சுவிஸ் நாட்டவர்கள், சட்டங்கள் கடுமையாக்கப்படுவதை எதிர்க்கும் நிலையில் இடது சாரி அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன நல மருத்துவர்கள் கொண்ட குழுவானது துப்பாக்கி பயன்பாட்டின் மீதான சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கின்றது.

பொலிஸ் அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த Max Hoffman கூறும்போது நாட்டில் வன்முறை அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளதாலேயே ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் சட்டம், சுவிட்சர்லாந்திலும் கொண்டுவரப்படவேண்டும் என்று பிரச்சாரம் செய்வதாகத் தெரிவித்தார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்