மின்தடையால் அவதிப்பட்ட ஜெனிவா மக்கள்: Ticino-வில் கடும் மழை எச்சரிக்கை

Report Print Trinity in சுவிற்சர்லாந்து
53Shares
53Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மற்றும் லுசர்னே மாகாணங்களில் நேற்று கடுமையான மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவின் Rue du Stand துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி நேற்று காலை எட்டு மணி முதல் மின்சாரம் தடைபட்டது.

ட்ராம்கள் டிராலி பஸ்கள் செயல்படவில்லை, இதனால் உள்ளூர் பயணம் பாதிக்கப்பட்டது. வியாபாரமும் பாதித்த நிலையில் காலை 10 மணியளவில் இந்த சிக்கல் சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் லுசர்னே நகரத்திலும் மின்சாரம் நிறுத்தப்பட்ட நிலையில், காலை எட்டு மணிக்கு முன்னதாக ஏற்பட்ட இந்த மின்வெட்டு ஒருமணி நேரத்தில் சரி செய்யப்பட்டது, இதன் காரணங்கள் தெரியவில்லை.

Ticino-வில் கடும் மழை எச்சரிக்கை

கடுமையான மழைக்கு தயாராகும்படி Ticino மாகாணத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை முன்னறிவிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆல்ப்ஸ் மலையின் தெற்கு சரிவில் மழை மேகங்கள் உருவாகியதை தொடர்ந்து இம்மழை குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்குள்ள Centovalli Railway மூடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்