சூரிச் மாகாணத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு டேப்லட் கணணிகள்

Report Print Trinity in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் பள்ளிக்குழந்தைகளுக்கு டேப்லட் கணனிகள் வழங்கப்படவுள்ளன.

பள்ளிக்குழந்தைகளுக்காக 3,000 டேப்லட் கணனிகள் வாங்கப்படவுள்ளது, புதிய டிஜிட்டல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நான்காம் கிரேட் குழந்தைகளுக்கு இந்த கணணிகள் வழங்கப்படும்.

ஒவ்வொன்றும் CHF 1000 என்கிற விலையில் ‘Acer Switch 5’ வகைகளை சேர்ந்த இந்த டேப்லட் கணணிகள் விண்டோஸ் 10 வெர்சனில் இயங்குகிறது.

பள்ளியின் வரைமுறைகளுக்குட்பட்டு இந்தக் கணணிகளை குழந்தைகள் அவர்களது இல்லத்திற்கு கொண்டு போகலாம், மேலும் அவர்களது சொந்தப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதில் சிறப்பு.

இந்த திட்டம் பள்ளிகளுக்கான CHF 12m தொழில்நுட்ப மேம்பாட்டின் ஒரு பகுதியாகும். மேலும் பள்ளிகள் தற்போது மேம்படுத்தப்பட்ட Wi-Fi அமைப்புகளை உபயோகப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்