சுவிஸ் கல்வியாளருக்கு எதிராக இன்னொரு பாலியல் குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

ஜெனிவாவின் அரசு வழக்கறிஞரிடம் சுவிஸ் கல்வியாளரான தரிக் ரமதான்மீது இன்னொரு பாலியல் குற்றச்சாட்டுப் புகாரளிக்கப்பட்டுள்ளதை சுவிஸ் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

பத்தாண்டுகளுக்குமுன் ஜெனிவா ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகார் குறித்து ரமதானின் வழக்கறிஞரைத் தொடர்புகொண்டபோது அவர் தனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது என்றும் ரமதானிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்படாமல் அவரைக் குறித்த மோசமான குற்றச்சாட்டுகள் ஊடகங்களுக்கு அளிக்கப்படுவது அவரது தனியுரிமையை மீறும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

பிப்ரவரி மாதம் பிரான்சில் இரண்டு பெண்கள் ரமதான்மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தெரிவித்ததன்பேரில் அவர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டதும் மீண்டும் இன்னொரு குற்றச்சாட்டு பிப்ரவரி மாதத்திலேயே பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஜெனிவா பள்ளி ஒன்றில் பணி புரியும்போது பல மாணவிகளுடன் தவறான உறவில் இருந்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக இரண்டு விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், ரமதான் தன்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளார்.

(Key Stone)

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்