சுவிட்சர்லாந்தில் நடு இரவில் கார் ஓட்டும் பேய் டிரைவர்? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

Report Print Santhan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிட்சர்லாந்தில் இரவு நேரத்தில் 100 கி.மீற்றர் வரை தவறான பாதையில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இத்தாலியைச் சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்க நபர் chur பகுதியிலிருந்து Zurich A3 தேசிய நெடுஞ்சாலை வரை வாகனங்கள் செல்லும் பாதையில் செல்லாமல், மாறாக வாகனங்களுக்கு எதிராக காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

இப்படி பல தேசிய நெடுஞ்சாலைகளை அதிவேகமாக கடந்து வந்த இவரால், சில நேரங்களில் பெரும் விபத்து ஏற்படவிருந்தது.

இதனால் இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து உடனடியாக Zurich பகுதி பொலிசாருக்கு தகவல் தெரிவித்தால், பொலிசார் அவரை விரட்டியுள்ளனர்.

இருப்பினும் அவர் தொடர்ந்து காரை ஓட்டிச் சென்றதால் பொலிசார் Horgen பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 2.30 மணியளவில் கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், காரை ஓட்டி வந்த நபரை கைது செய்துவிட்டதாகவும், காரின் உள்ளே மற்றொரு நபர் இருந்தாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இப்படி எதிர் திசையில் அவர் 100 கி.மீற்றருக்கு மேல் அதிவேகமாக வந்து எந்த விபத்திலும் சிக்காமல் வந்ததால், அவரை இணையவாசிகள் பேய் டிரைவர் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்