சுவிஸில் இரண்டு சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக சிரியா சென்ற இரண்டு சுவிஸ் சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக சுவிட்சர்லாந்தை சேர்ந்த 16 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் சிரியா சென்றுள்ளனர்.

இவர்கள் மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு வந்த போது, கைது செய்யப்பட்டனர், 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்கள் மீதான விசாரணை தொடங்கியது.

இந்நிலையில் தற்போது இருவருக்கும் 18 வயது பூர்த்தியாகி விட்டதால், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சூரிச் மாகாண நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கு Winterthur நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்