அவுஸ்திரேலியா செய்வது அராஜகம்: கோபத்தில் சுவிஸ் மருத்துவமனை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

தனது விருப்பத்தின் பேரில் உயிரை விட முடிவு செய்துள்ள 104 வயது விஞ்ஞானியின் விருப்பத்தை நிறைவேற்றாத அவுஸ்திரேலியாவின் செயல் அராஜகமானது என்று சுவிட்சர்லாந்து மருத்துவமனை கூறியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தனது விருப்பத்தின்படி உயிரை விட சட்டம் அனுமதிக்காததால் சுவிட்சர்லாந்துக்கு சென்று அங்கு உயிர் துறக்க உதவும் மருத்துவமனை ஒன்றில் தன் கடைசி மூச்சை விட முடிவு செய்துள்ளார் அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானியான டேவிட் குடால்.

தனது வீட்டில் தனது கடைசி மூச்சை விட வேண்டும் என்ற ஆசை கொண்டவர் டேவிட். அவரது கடைசி விருப்பத்தைக்கூட நிறைவேற்றாத அவுஸ்திரேலியா செய்வது அராஜகம் என்று சுவிட்சர்லாந்து சாடியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தானாகவே தனது உயிரை விடுவதோ, இன்னொருவர் உயிரை விடுவதற்கு உதவுவதோ சட்டப்படி குற்றமாகும்.

தற்போது விக்டோரியா மாகாணம் மட்டும் அதை சட்டப்பூர்வமாக்க முடிவு செய்துள்ளது.

ஆனால் அதிலும் இரண்டு சிக்கல்கள்; ஒன்று, அந்த சட்டம் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் அமுலுக்கு வருகிறது.

இரண்டு, மோசமாக நோயுற்றவர்கள் அதுவும் இன்னும் ஆறு மாதங்களுக்கும் குறைவாகவே வாழ்வார்கள் என மருத்துவர்கள் முடிவு செய்தவர்கள் மட்டுமே தாங்களாகவே மருத்துவ உதவியுடன் தங்கள் உயிரை விட முடியும்.

டேவிடுக்கு மோசமான நோய் ஒன்றுமில்லாததால் அவர் தற்போது இந்த தள்ளாத வயதில் சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது.

பிரான்ஸுக்கு தனது மகனைப் பார்க்க சென்றுள்ள டேவிட் பின்னர் அங்கிருந்து சுவிட்சர்லாந்து செல்ல உள்ளார்.

பின்னர் அவர் மே மாதம் 10 ஆம் திகதி Baselக்கு அருகில் அமைந்துள்ள Eternal Spirit மருத்துவமனையில் தனது வாழ்வை முடித்துக் கொள்ள இருக்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்