சிரியாவில் பயன்படுத்தப்பட்ட சுவிஸ் ஆயுதங்கள்: வெளியான ஆதாரம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சிரியாவில் அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் சுவிட்சர்லாந்தின் பங்கும் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

டிசினோ வழக்கறிஞரும் ஐக்கிய நாடுகளுக்கான தலைமை வழக்கறிஞருமான Carla del Ponte (71) வெளியிடவிருக்கும் தனது புதிய புத்தகத்தில் பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிரியா தொடர்பாக சர்வதேச சமூகம் எடுத்துள்ள நடவடிக்கைகள், சிரியா அரசுப்படைகள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் உள்ளிட்டவை தொடர்பில் del Ponte விரிவாக அலசியுள்ளார்.

அதில் அவர் சுவிட்சர்லாந்தையும் குற்றஞ்சாட்டியுள்ளது மட்டுமின்றி சிரியா அரசு பயன்படுத்திய ஆயுதங்களில் சுவிட்சர்லாந்தின் பங்கும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுக்கு சுவிஸ் அரசு அளித்த ஆயுதங்களே சிரியாவில் ஆசாத் அரசு அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் அந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆனால் அதை நிரூபிக்கும் எந்த ஆவணமும் தங்களிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவுதி போன்ற நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை சுவிஸ் அரசாங்கம் இனியேனும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

சிரியா விவகாரத்தில் சர்வதேச சமூகம் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நாம் எதையுமே செய்யவில்லை என்பது உண்மையில், அங்குள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானது என்றார் அவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்