சுவிஸ் பள்ளியில் துப்பாக்கிசூடு நடத்த திட்டம்: மாணவர் கைது

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் உள்ள பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்ட மாணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Bellinzonaவை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க மாணவர் ஒருவர் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்த திட்டமிட்டதாக பொலிசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மாணவர்களையும், ஆசிரியர்களையும் அடிக்கடி அச்சுறுத்தி வந்த மாணவனிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவனது வீட்டை சோதனையிட்டதில், துப்பாக்கிகள் மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து குறித்த மாணவனை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

எனினும் துப்பாக்கியின் ரகம் குறித்தோ, மாணவனின் திட்டம் குறித்தோ தகவல்கள் எதையும் பொலிசார் வெளியிடவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்