மர்மமான முறையில் இறந்த இளைஞர்: விசாரணை மேற்கொண்டுள்ள சுவிஸ் பொலிஸ்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
151Shares
151Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் ஓட்டல் அறையில், இறந்து கிடந்த துருக்கி இளைஞர் ஒருவரின் மர்ம மரணத்தை Glarus பொலிசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

சுவிஸின் Näfels நகரில், 30 வயதுமிக்க துருக்கி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அறையெடுத்து தங்கியுள்ளார். குறித்த நபர் தனது தோழியுடன் ஓட்டல் அறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அறிந்த ஓட்டல் ஊழியர்கள், அறையின் கதவை திறந்து பார்த்தபோது குறித்த நபர் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஓட்டலுக்கு விரைந்த பொலிசார் இறந்த நபரின் உடலை மீட்டனர். அத்துடன் குறித்த இளைஞரின் தோழி முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், Glarus நகர பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறித்த நபர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் என்றும், ஆனால் அவருக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

முன்னதாக, சுவிஸ் விமான நிலையத்தில் குறித்த இளைஞர் விமானம் தரையிறங்கியபோது ‘All ahu Akbar' என்று முழக்கமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவரை பிடித்த சக பயணிகள் சுவிஸ் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்