பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதிகளுக்கு சுவிஸ் மக்களின் திருமண பரிசு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
261Shares
261Shares
lankasrimarket.com

எதிர்வரும் சனிக்கிழமை பிரித்தானிய இளவரசர் ஹரி தமது காதலியான அமெரிக்க நடிகை மேகம் மெர்க்கலை திருமணம் செய்ய உள்ளார்.

குறித்த நிகழ்வை எதிர் நோக்கி சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் உள்ள Glattfelden பகுதி மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

Glattfelden பகுதியில் மெர்க்கலின் முன்னோர்கள் குடியிருந்ததாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் ஆதாரங்களுடன் சமீபத்தில் நிரூபித்துள்ளார்.

1773-ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர்கள் அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதிக்கு குடியேறியதகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் Glattfelden நகராட்சி மன்ற தலைவர் Ernst Gassmann பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கலுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் ஹரி மெர்க்கல் தம்பதிகள் திருமணத்திற்கு பின்னர் Glattfelden பகுதிக்கு வருகை தர வேண்டும் என்பதே.

மட்டுமின்றி இங்குள்ள மக்கள் இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் தம்பதிக்கு சிறப்பு பரிசுகளையும் சேகரித்து வருகின்றனர்.

ஆனால் Glattfelden நகராட்சி மன்ற தலைவரின் அழைப்பினை இளவரசர் ஹரி ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்