அரிய வகை நீலநிற வைரம் ஜெனிவாவில் ஏலம்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

300 ஆண்டுகளாக ஐரோப்பா அரசக் குடும்பத்தினர் கையில் இருந்த பழமையான வைரம் 6.7 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

18ம் நூற்றாண்டில் 6.16 காரட் மதிப்புள்ள நீல நிற வைரமொன்று இந்தியாவின் கோல்கொண்ட சுரங்கத்திலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியானது.

அப்போதைய அரச குடும்பமான எலிசபெத் பார்னீஸிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வைரத்தை, 1715ம் ஆண்டு தனது மகள் பரிமா பிரவுக்கு திருமண பரிசாக வழங்கினார்.

தொடர்ந்து அரச குடும்பத்தினர் ஐரோப்பிய வம்சாவளியை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டதால் ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணமானது.

இந்நிலையில் இந்த நீலநிற வைரம் நேற்று ஜெனீவாவில் ஏலத்தில் விடப்பட்டது, இது 6.7 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்