சுவிட்சர்லாந்தின் Visp Raron பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் Visp Raron பகுதியில் Air zermatt எனும் ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானதாக வலைஸ் மாகாண பொலிஸ் ஊடக பேச்சாளர் மார்கஸ் ரிடர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை காலை 10 மணியளவில் Air zermatt ஹெலிகொப்டர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய விமானி சிறு காயங்களுடன் Visp வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Raron Air zermatt ஹெலிகொப்டர் தளத்திற்கு அருகாமையில் உள்ள Beggersee பகுதியிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

Air zermatt ஆரம்பிக்கப்பட்டு 50 வது ஆண்டு நிகழ்வை எதிர்வரும் வார இறுதிநாட்களில் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தீயணைப்பு தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்