இம்முறை வாடகை நிவாரணம் கிடையாது: சுவிஸ்

Report Print Trinity in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் சுவிஸ் வாடகைகள் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த மதிப்பாய்வு கீழே சென்றால் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்கள் குடியிருப்பின் வாடகை குறைவு கோர அனுமதி உண்டு.

இந்தமுறை 1.50% மாகவே இதன் மதிப்பாய்வு இருப்பதால் வாடகை குறைவு கோர முடியாத நிலையில் சுவிஸ் வாடகைவாசிகள் இருக்கின்றனர்.

கடந்த 2008 ஆண்டிற்கு பின் சுவிஸ்ஸில் வாடகை வீழ்ச்சி போன 2017 ஜூன் மாதம் ஏற்பட்டது.

சுவிஸ்ஸின் சராசரி அடமான விகிதத்தின் அடிப்படையில் இந்த மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் மதிப்பு 0.25 வரையிலும் நிகர எண்ணிற்கு ஈடாக முழுமையாக்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்திய மதிப்பாய்வு 1.50 சதவிகிதம் மற்றும் அதன் முழுமையாக்கப்பட்ட 0.25 சதவிகிதம் சேர்த்தால் 1.51% சதவிகித்திற்குள்ளாக வருகிறபடியால் தற்போது சுவிஸ் வாடகைதாரர் வாடகை குறைப்பு பற்றி கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக உங்கள் வாடகை ஒப்பந்தத்தை வீட்டு அடமான வட்டி விகிதங்களுடன் இணைத்தால் இந்த குறிப்புகள் வீழ்ச்சியடையும்போது உங்கள் வாடகை குறைக்க கோர முடியும்.

இது குறித்து சுவிஸ் குடியிருப்போரின் அசோசியேஷன் , ரோமண்டே கிளை, எப்போது, எப்படி ஒரு வாடகை குறைப்பு கோரிக்கையைச் செய்வது என்பது குறித்துப் பயனுள்ள தகவலை வழங்குகிறது. இதுபற்றிய விவரங்களை இவர்களின் வலைத்தளம் (பிரஞ்சு) www.asloca.ch என்பதில் காணலாம்.

மேலும் தற்போதைய மற்றும் முந்தைய வட்டி விகித குறைப்பு Office fédéral du logement (OFL) website. எனும் இணையதளத்தில் காணக் கிடைக்கின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்