அம்மாக்கள் பிரித்தானிய முன் மாதிரியைப் பின்பற்ற வேண்டும்: சுவிட்சர்லாந்து மருத்துவர்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய முன்மாதிரியைப் பின்பற்றி சுவிட்சர்லாந்து அம்மாக்களும் குழந்தை பெற்றபின் குறைந்த நேரமே மருத்துவமனையில் செலவிட வேண்டும் என சுவிட்சர்லாந்து முன்னணி மருத்துவர் ஒருவர் அறிவுறுத்தியுள்ளார்.

Lausanne பல்கலைக்கழக மருத்துவமனையில் குழந்தைப் பேறு துறையின் தலைவராக உள்ள David Baud, சுவிட்சர்லாந்தில் குழந்தை பெற்றபின் தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காலகட்டம் குறையாதது கண்டு தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் குழந்தை பெற்ற ஒரு தாய், சுகப்பிரசவத்திற்குப் பின் நான்கு நாட்களும் சிசேரியனுக்குப் பின் ஐந்து நாட்களும் மருத்துவமனையில் செலவிடுகிறார்.

அது அதிகம் என கருதும் David Baud, அதை 72 மணி நேரமாகக் குறைக்கும் நோக்கில் தனது சொந்த மருத்துவமனையில் அதை முயற்சி செய்து வருகிறார். முன்பு லண்டனிலுள்ள புனித மேரி மருத்துவமனையில் பணிபுரிந்த David Baud, பிரித்தானிய தாய்மார்கள் குழந்தை பெற்ற 48 மணி நேரத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விடுவதாகக் கூறுகிறார்.

சமீபத்தில் பிரித்தானிய இளவரசி கேட் குட்டி இளவரசர் லூயிஸைப் பெற்றபின் சில மணி நேரத்தில் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய முறை சிறந்தது ஏனென்றால், அது தாய், சேய் இருவரின் நலனுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது, எதற்காக தேவையின்றி மருத்துவமனையில் தங்க வேண்டும்? என்கிறார் David Baud.

சுவிட்சர்லாந்தின் மருத்துவக் காப்பீட்டு ப்ரீமியம்களை எவ்விதம் குறைப்பது என்னும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் David Baud இவ்விதம் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்