அப்பாவாவதற்கெல்லாம் லீவு கிடையாது: சுவிஸ் அரசு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
178Shares
178Shares
lankasrimarket.com

பிரசவத்திற்காக அம்மாவுக்கு விடுமுறை அளிப்பதுபோல், அப்பாவுக்கு கொடுக்க முடியாது என்று சுவிஸ் அரசு கைவிரித்து விட்டது.

பிறந்த குழந்தையுடன் நான்கு வாரங்கள் செலவிடலாம் என்னும் ஆசையிலிருந்த சுவிஸ் அப்பாக்களின் ஆசையில் அரசாங்கம் மண்ணைப் போட்டுவிட்டது.

அம்மாக்களுக்கு பிரசவ விடுப்பு அளிக்கும் அதே திட்டத்தின் கீழ் அப்பாக்களுக்கும் 20 நாள் விடுப்பு அளிக்கும் வரைவு ஒன்று சுவிட்சர்லாந்தில் முன்வைக்கப்பட்டது.

100,000 பேர் கையெழுத்திட்ட வரைவு ஒன்றை labour group Travail Suisse, feminist umbrella organization Alliance F, men's group männer.ch மற்றும் Pro Familia Suisse ஆகிய நான்கு அமைப்புகள் கடந்த அண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தன.

ஆனால் இந்த வரைவு அரசுக்கும் ஒழுங்கமைப்பு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிறுவனங்களுக்கும் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என அரசு கூறிவிட்டது.

பிரசவ காலத்தில் அப்பாக்களுக்கு விடுப்பு அளிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்யும் உரிமை அவர்களுக்கு பணி வழங்குபவர்களிடமே இருக்கட்டும் என அது கூறிவிட்டது.

தற்போது சுவிட்சர்லாந்தில் குழந்தை பிறந்த அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்ள அப்பாக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அம்மாக்களுக்கு 14 வாரங்கள் பிரசவ விடுப்பு அளிக்கப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்