சுவிற்சர்லாந்தில் அகதிகளின் பேஸ்புக் கணக்கு ஆராயப்படலாம்!

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிற்சர்லாந்தில் இனிமேல் குடிவரவுத்துறை அதிகாரிகள் அகதிகளின் பேஸ்புக் கணக்கை சரிபார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிப்பவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்படுவது கடுமையாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அகதிகளின் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள இனிமேல் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் சரிபார்க்கப்படலாம் என தெரிகிறது.

இந்த முறைக்கு ஏற்கனவே பெடரல் நீதிமன்றமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

அதாவது, நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் விண்ணப்பத்திருந்த நிலையில், அவரது பேஸ்புக் கணக்கை ஆராய்ந்த போது ஸ்பெயினில் தொழில் செய்வது கண்டறியப்பட்டது.

ஆனால் அது பொய்யான தகவல் என எவ்வளவு எடுத்துக்கூறியும், பெடரல் நீதிமன்றம் நிராகரித்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

எனவே அகதிகளின் பேஸ்புக் கணக்கை ஆராயும் நிலை விரைவில் கொண்டுவரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்