பயங்கரக் கொள்ளையனுக்கு பரிசு கொடுத்துள்ள சுவிற்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
249Shares
249Shares
lankasrimarket.com

80, 90ம் ஆண்டுகளில் பயங்கரக் கொள்ளையனாக விளங்கிய ஒரு நபருக்கு Zurich நகர கவுன்சிலர், வேலை வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார்.

Hugo Portmann, Zurich மற்றும் Thurgau நகரங்களில் உள்ள பல வங்கிகளில் கொள்ளையடித்ததோடு மட்டுமின்றி பல முறை சிறையிலிருந்து தப்பவும் முயன்றிருக்கிறான்.

ஒரு முறை சிறைக் கைதிகளுக்கான மலை ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றபோது Hugo Portmann தப்பினான்.

அதுபோல் Graubündenஇலுள்ள Realta சிறைச்சாலையிலிருந்தும் அவன் தப்பினான். அவனுக்குதான் இப்போது Zurich நகர கவுன்சிலர் வேலை வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார்.

ஜூலை மாத மத்தியில் சிறையிலிருந்து விடுதலையாக உள்ள அவன் அதற்குப்பின் இந்த வேலையில் சேர இருக்கிறான்.

Zurich நகரின் Civil Engineering மற்றும் Waste Disposal துறையில் முன்பு தலைவராக இருந்த இந்நாள் மேயர் Filippo Leuteneggerஇன் மேஜைக்கு Portmannஇன் வேலை விண்ணப்பப் படிவம் வந்து சேர்ந்ததையடுத்து அவர் Portmannக்கு வேலை வாய்ப்பளிக்க முன்வந்துள்ளார்.

என்னைப் பொருத்தவரையில் உண்மையாகவே முயற்சி செய்யும் ஒருவர் ஒரு இரண்டாவது வாய்ப்பைப் பெறும் தகுதியுடையவர் என்று மேயர் தெரிவித்துள்ளார்.

வேலைக்கான அனைத்து தேர்வுகளிலும் Portmannவெற்றி பெற்றுள்ளார், அது மட்டுமின்றி நகருக்கென்று ஒரு சமூக பொறுப்பும் உள்ளது என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 16ஆம் திகதி Portmann விடுதலை பெற இருக்கிறான்.

அவனுக்கு வேலை வாய்ப்பளிக்கப்பட்டாலும் முன்னாள் கொள்ளைக்காரனான Portmann மூன்று வருடங்களுக்கு தவறாமல் அதிகாரிகளிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்