சுவிஸில் போலி ஆவணங்களால் உதவித் தொகை பெற்ற பெண்: 13 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
336Shares
336Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் போலி ஆவணங்கள் தயாரித்து சமூக நல உதவிகளை முறைகேடாக பெற்று வந்த பெண்மணியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சூரிச் நகர சமூக சேவை ஊழியர் ஒருவர் கடந்த 13 ஆண்டுகளாக போலி ஆவணங்களின் பேரில் மாதந்தோறும் உதவித் தொகை பெற்று வந்துள்ளார்.

நீண்ட 13 ஆண்டுகளாக நடந்த முறைகேட்டால் சுமார் 340,000 பிராங்க் தொகையை அவர் அரசிடம் இருந்து முறைகேடாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரிச் நகர சமூக நல அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்துள்ள அவர், பொதுமக்களுக்கு செல்ல வேண்டிய உதவித் தொகைகளை முறைகேடாக தமது வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார்.

குறித்த பெண்மணியின் செயற்பாடு மிகப்பெரும் நம்பிக்கை துரோகம் என சூரிச் மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்திற்கு விளக்கம் ஏதும் அளிக்க மறுத்த குறித்த பெண்மணி, நடந்தவற்றுக்கு நான் வெட்கப்படுகிறேன் என மட்டுமே தெரிவித்துள்ளார்.

மேலும் முறைகேடாக சம்பாதித்த பணத்தில் தாம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபணமானதால் குறித்த பெண்மணிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் 162,000 பிராங்க் தொகையை மாதம் 700 வீதம் 19 ஆண்டுகளில் அரசுக்கு திருப்பி செலுத்தவும், முறைகேட்டில் ஈடுபட்டதில் எஞ்சிய பணத்தை செலுத்த வேண்டாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்