சுவிட்சர்லாந்தில் ரயில் பயணிக்கு வாள் வெட்டு: இளைஞரை தேடும் பொலிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
244Shares
244Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் சூரிச் மற்றும் Oerlikon ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் பயணம் செய்த நபர் ஒருவரை கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவான இளைஞரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞருக்கு 25 வயது இருக்கும் எனவும் பாதிக்கப்பட்ட நபருக்கு 41 வயது எனவும் தெரிய வந்துள்ளது.

நள்ளிரவு தாண்டிய நேரத்தில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து அந்த நபர் உதவி கேட்டு கதறியுள்ளார். உடனடியாக அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும், விரைந்து வந்த பொலிசார் மற்றும் மருத்துவ உதவி குழுக்கள் அவரை மீட்டுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் விசாரணை துரிதப்படுத்தியுள்ளதாகவும் சூரிச் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர் ஜேர்மன் மொழி பேசுபவர் எனவும், 25 வயது மதிக்கத்தக்க நபர் எனவும், அவரது இடது மார்பில் பச்சை குத்தப்பட்டுள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய நபர் குறித்து தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்