குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை: சுவிஸ் பொலிஸ்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
338Shares
338Shares
lankasrimarket.com

வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது, குழந்தைகளின் பெற்றோரில் ஒருவர் மட்டும் அவர்களுடன் பயணிக்கும்பட்சத்தில், உடன் வராத பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தைக் கொண்டுவர வேண்டும் என சுவிஸ் பொலிசார் வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் விமான நிலையங்களில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம் என்று தெரிவித்துள்ள பொலிசார், அவ்வாறு ஒப்புதல் கடிதத்தைக் கொண்டு வராதவர்கள், அதனால் ஏற்படும் குளறுபடிகளால் ஏற்படும் தாமதத்தால் விமானத்தைத் தவற விட்டால், மீண்டும் பயணிக்க ஆகும் செலவுகளை தாங்களேதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் பெயரின் பின்னால் சேர்க்கப்படும் பெயர் பெற்றோரின் பெயராக இல்லாமல் வேறு பெயராக இருக்கும்போதுதான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

உடன் வராத பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை கொண்டு வரும் நடைமுறை, Schengen தடையில்லா போக்குவரத்து ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தப்படுகிறது.

குழந்தைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.

பயணிக்கும் நாடு மற்றும் குழந்தைகள் நடந்து கொள்ளும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்புதல் கடிதத்தைக் காட்டும்படி பொலிசார் நிர்ப்பந்திக்கலாம்.

தேவை ஏற்படும்பட்சத்தில் அதிகாரிகள் குழந்தைகளிடம் பேசி சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி எல்லை பொலிசாருக்கு மட்டுமின்றி, விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது வாயிலில் நிற்கும் ஊழியர்களுக்கும் ஒப்புதல் கடிதத்தைக் கேட்கும் உரிமை உள்ளது.

குழந்தையுடன் எந்த பெற்றோர் வரவில்லையோ அவர்களின் புகைப்படத்தைக் கையில் வைத்திருப்பதும் நல்ல யோசனை என்கின்றனர் பொலிசார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்