சுவிஸ்ஸில் பெரும் அசம்பாவிதத்தில் இருந்து தப்பிய துருக்கி விமானம்: விசாரணைக்கு உத்தரவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
111Shares
111Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னில் துருக்கு நாட்டுக்கு புறப்பட்ட விமானத்தை குறிவைத்து ட்ரோன் ஒன்று குறுக்கிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை வாரியம் (STSB) உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2-ஆம் திகதி Berne-Belp விமான நிலையித்தில் இருந்து துருக்கியின் Antalya நகரம் நோக்கி புறப்பட்டு சென்றது Bombardier BD 700 விமானம்.

குறித்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 1200 மீட்டர் உயரம் சென்றபோது திடீரென்று அந்த விமானத்தை குறிவைத்து ட்ரோன் விமானம் ஒன்று நெருங்குவதை விமானிகள் கண்டறிந்து அதிர்ந்துள்ளனர்.

சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை வாரியமானது இந்த ட்ரோன் தொடர்பில் துருக்கி விமானத்திற்கு எந்த எச்சரிக்கையும் தரவில்லை என கூறப்படுகிறது.

அது எந்த வகையான ட்ரோன், அதன் வகை என்ன என்பது தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்காமல் விமானிகள் திணறியுள்ளனர்.

ஆனால் திடீரென்று அந்த ட்ரோன் திசைமாறி சென்றதை அடுத்தே விமானிகளுக்கு பதற்றம் தணிந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது உயர்மட்ட விசாரணைக்கு சுவிஸ் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பயணிகள் விமானத்தை ட்ரோன்கள் வழிமறிப்பது இது முதன் முறையல்ல. சூரிச் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பயணிகள் விமானம் ஒன்றை ட்ரோன் விமானம் ஒன்று மோதவிருந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் தனியாருக்கு சொந்தமான சுமார் 100,000 ட்ரோன்கள் செயல்பாட்டில் உள்ளதாக ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை எதிர்கொள்ளும் வகையில் விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் 5 கி.மீ தொலைவு ட்ரோன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்