சுவிட்சர்லாந்தில் 154 ஆண்டுகளுக்கு பிறகு உச்சத்தைத் தொட்ட வெயில்: ஏற்பட்டுள்ள மோசமான விளைவுகள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
267Shares
267Shares
lankasrimarket.com

1864க்கு பிறகு இந்த ஆண்டு ஏப்ரலுக்கும் ஜூலைக்கும் இடையிலான கால கட்டம்தான் அதிக வெப்பமானதாகக் கருதப்படுகிறது.

சிறு பனிப்பாறைகள் உருகுகின்றன, காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கிறது, பல ஆறுகளிலும் ஏரிகளிலும் நீர் மட்டம் கவலையளிக்கும் விதத்தில் குறைந்து கொண்டே வருகிறது.

ஒன்றரை நூற்றாண்டிற்குப்பின் கடும் கோடை, சுவிட்சர்லாந்தின் நீர் நிலைகளை பதம் பார்த்து வருகிறது. பெரிய ஆறுகள் வற்றி வருகின்றன.

ஏராளமான நீர் சேமிப்பகங்கள் இருந்தபோதிலும் நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருகிறது.

சுவிட்சர்லாந்தில் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் நீரில் 80 சதவிகிதம் நிலத்தடி நீரிலிருந்துதான் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதற்கு பதிலாக குடிநீர் மற்றும் தொழிற்சாலைத் தேவைகள், மின் உற்பத்தி, பொழுதுபோக்கு அல்லது கழிவகற்றுதல் போன்ற அனைத்து தேவைகளுக்கும் நீர் சேமிப்பகங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

நீரில் வாழும் உயிரினங்களும் தாவரங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மீன்களைப் பாதுகாப்பதற்காக வேறு நீர் சேமிப்பகங்களுக்கு அவை பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்