இலங்கை அகதி ஒருவரின் பார்வையில் பாரம்பரிய சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
523Shares
523Shares
lankasrimarket.com

சசி சுப்ரமணியம் இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்.

பத்திரிகையாளராக தனது வாழ்வைத் தொடங்கிய அவர் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சுவிட்சர்லாந்தை வந்தடைந்தார்.

அரசியல் மீது மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த சசி சுப்ரமணியம், தான் எப்போதுமே பிரபல்யமான கலாச்சாரங்கள் மற்றும் சடங்குகள் மீது ஆர்வம் கொண்டதில்லை என்கிறார்.

பின்னர் ஒரு வேலை காரணமாக கலாச்சாரம் குறித்து புகைப்படங்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது மக்களையும் அவர்களது பாரம்பரியங்களையும் தனது கெமரா வழியாக பார்க்கும்போதுதான் அதிலிருக்கும் ஆனந்தம் அவருக்குத் தெரிய வந்தது.

இதில் தனக்கு மிகவும் பிடித்தது குழந்தைகள்தான் என்று கூறும் சசி சுப்ரமணியம், தங்கள் நாட்டுப்புற பண்டிகைகளை சீரியஸாக எடுத்துக் கொண்டு மிகவும் உற்சாகத்துடன் அவற்றில் பங்கு கொள்ளும் அவர்களை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறுகிறார் அவர்.

Silvesterchlausen பண்டிகை

Eierläset முட்டைப் பந்தயம்

Whitsun புதர் பண்டிகை

பேஸல் கார்னிவல்

Valais பசுச் சண்டை

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்