சுவிஸ்ஸில் கர்ப்பிணி பெண்ணுக்கு எக்ஸ்ரே எடுத்த அதிகாரிகள்: வெளியான அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
937Shares
937Shares
lankasrimarket.com

சுவிஸ்ஸில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட விவகாரத்தில், அவர் போதைமருந்து கடத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Oberwallis பகுதி எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபர்களை எக்ஸ்ரே எடுக்க அனுப்பும் நடவடிக்கையானது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

கடந்த 2016 மற்றும் 17 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போதை மருந்து கடத்தலை தடுக்கும் பொருட்டு சந்தேக நபர்களை எக்ஸ்ரே சோதனைக்கு Oberwallis பகுதி எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் உட்படுத்தியுள்ளனர்.

226 நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 21 பேர் மட்டுமே போதை மருந்து கடத்தியது தெரியவந்தது.

மட்டுமின்றி கர்ப்பிணி பெண்களையும் சந்தேகத்தின்பேரில் எக்ஸ்ரே சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதுவே தற்போது உயர்மட்ட அதிகாரிகளால் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் கர்ப்பிணி பெண்களை எக்ஸ்ரே சோதனைக்கு உட்படுத்துவது, பிறக்கும் குழந்தைக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும் எனவும் அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளது.

ஆனால் கர்ப்பிணிகள் வேடத்தில் சில பெண்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாலையே தாங்கள் எக்ஸ்ரே சோதனை மேற்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்