12 வயது மகனை சாரதியாக்கிய தந்தை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
247Shares
247Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் 12 வயது சிறுவனை வாகன சாரதியாக்கிய தந்தைக்கு லாசன்னே நகர பொலிசார் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.

லாசன்னே நகரில் கடந்த ஏப்ரல் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. ரஷ்ய பொறியாளரான தந்தை தமது 12 வயது மகனை சாரதியாக்கி வகனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது ரோந்து பணியில் இருந்த பொலிசார் இதை கவனித்து உடனடியாக வகனத்தை நிறுத்தி இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை Vaudois நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், உரிமம் இல்லாத நபரை வாகன சாரதியாக்கிய குற்றத்திற்காக நால் ஒன்றுக்கு 300 பிராங்குகள் வீதம் 15 நாட்களுக்கான தொகையை அபராதமாக செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிறார்களுக்கான நீதிபதியிடம் அந்த 12 வயது சாரதியை ஒப்படைக்கவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்