சுவிட்சர்லாந்தில் பெற்றோரால் கடுமையாக தாக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
236Shares
236Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் 18 வயதுக்கு உட்பட்ட மூன்றில் இரண்டு இளைஞர்கள் பெற்றோரால் உடல் ரீதியான தண்டனைக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் பெற்றோரால் முகத்தில் அறைவதாக 41% இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் முகத்தில் குத்துவது, பொருட்களை தூக்கி அடிப்பது அல்லது கொடூரமாக தாக்குவது என 22% பேர் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் 10 மாகாணங்களில் உள்ள சுமார் 8,317 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

குறிப்பாக பெற்றோரை சார்ந்து வாழும் அல்லது வேலை இன்மையால் நிதி சார்ந்த உதவி பெறும் இளைஞர்கள் கடுமையான தாக்குதலை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ள குடும்பத்தினரிடையே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இது ஆப்பிரிக்க நாடுகள், பிரேசில், ஐக்கிய அமீரகம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ள குடும்பத்தினரில் அதிக அளவு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்