சுவிட்சர்லாந்தில் ஈரான் அகதி தொடர்பில் நீதிமன்றம் அளித்த முக்கிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
257Shares
257Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோரி போராடி வரும் ஈரான் அகதிக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கேட்டு போராடி வந்த ஈரான் அகதிக்கு சுவிஸ் குடிமகன் அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தில் Graubünden மாகாணத்தில் உள்ள Trimmis பகுதியில் வாழ்ந்து வருபவர் அந்த ஈரானிய அகதி.

கடந்த 1989 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் கால் பதித்த அன்று முதல் இவர் சுவிஸ் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து வந்துள்ளார்.

ஆனால் மாகாண அரசால் நேரடியாக இரண்டு முறை குறித்த அகதிக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாகாண நீதிமன்றத்தை நாடிய அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் மாகாண அரசின் முடிவை நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த நிலையில் லாசன்னே நகரில் அமைந்துள்ள உயர் நீதிமன்றம் குறித்த ஈரானிய அகதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளதுடன், மாகாண நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

மாகாண அரசால் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், 30 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவரும் குறித்த நபருக்கு குடியுரிமை மறுப்பது அநீதி எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு குறித்த ஈரானிய அகதி தமக்கும் தமது மகளுக்கும் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளார்.

அவரது மகளின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மாகாண நிர்வாகம், டாக்ஸி சாரதியான ஈரானிய அகதியின் விண்ணப்பத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்