கனவுகள் நிஜமாக போகின்றது- நிறைவேற்றி தர நாங்கள் தயார்

Report Print Abhimanyu in தொழில்நுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

நாம் காணும் கனவுகள் உண்மையிலேயே நிகழ்ந்தால் எப்படி இருக்கும்? அவ்வாறான ஓர் வாய்ப்பு நிச்சயமாக இடம்பெறாது என்பது தான் உங்களுடைய பதிலாக காணப்படும். ஆனால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வெற்றியையும் ஈட்டிவிட்டது என கூறினால் நம்பமுடிகின்றதா?

ஆம், உங்கள் கனவுகளை நிறைவேற்றி வைக்ககூடிய மனிதர்களை தேடி கண்டுபிடித்து தரும் இணைய‌தளம் ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

advertisement

கட்டிடகலை நிபுணர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள குறித்த இணையதளத்தில் உங்கள் கனவுகளை சொல்லுங்கள் அதனை நிறைவேற்றித்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம் என கூறப்படுகின்றது.

குறித்த இணையதளமானது சமூக வலைப்பின்னல் வகையினை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதோடு கனவை குறிப்பிட்டவுடன் சக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அதனை நிறைவேற்றித்தருகின்றனர்.

ஆனால் இதற்கு முன்பாக நாமும் இணையதளத்தின் உறுப்பினர்களின் கனவுகளை நிறைவேற்றி உதவுவதாக பதிவு செய்தல் வேண்டும்.

மேலும், குறித்த தளத்தின் சிறப்பம்சமாக பார்க்கப்படுவதும் இதுதான் நமது கனவுகள் எவ்வாறு மற்றவர்களின் உதவியுடன் நிறைவேறுகின்றதோ அதே போல் அவர்களது கனவுகளை நிறைவேற்றி தர நாமும் உதவுகின்றோம்.

மனிதர்களுக்கிடையிலான சங்கிலிதொடர் என்ற மையகருத்தை பொருட்டாக கொண்டு வடிவமைக்கப்பட்டள்ள இத்தளம் lapapaya.org என்ற முகவரியில் காணப்படுகின்றது.

“பிலிப் வேலாகியூஸ்” என்ற நபர் குறித்த இணையதளத்தை உருவாக்கியது மட்டுமின்றி உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தொற்று வியாதியைப்போல் இணையத்தால் பரவ வேண்டும் என்பதே எனது யுகம் என தெரிவித்துள்ளார்.

http://lapapaya.org/

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments