செரமிக் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஹைப்பர் சோனிக் விமானங்கள் விரைவில்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

ஹைப்பர் சோனிக் விமானங்கள் என்பது மிக அதிவேகமாக பயணம் செய்யக்கூடிய விமானங்கள் ஆகும்.

இவற்றின் பறப்பின்போது வளியுடன் தொடர்புபட்டிருக்கும் பாகங்கள் அதிக அளவில் வெப்பமடையும்.

advertisement

இதனை தவிர்ப்பதற்கு பீங்கானால் (Ceremic) ஆன உடல் பாகங்களைக் கொண்ட விமானங்களை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இம் முயற்சியானது தற்போது வெற்றியை அடையும் தறுவாயில் காணப்படுகின்றது.

இத் தொழில்நுட்பமானது 3,000 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பத்தினையும் தாங்கும் திறன் கொண்டது.

மான்ஸ்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் மத்திய தென் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இத் தொழில்நுட்பத்தினை தோற்றுவித்துள்ளனர்.

இதேவேளை ஹைப்பர் சோனிக் விமானங்கள் மணிக்கு 12,348 கிலோ மீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments