விண்டோஸ் ஸ்டோரில் பெயின்ட் செயலி இலவசமாக வழங்கப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட் உடன் பெயின்ட் 3D செயலி வெளியிடப்பட்டது.
இந்த செயலி தொடர்ந்து விண்டோஸ் ஸ்டோரில் இலவசமாக கிடைப்பதுடன், அதற்கு தொடர்ச்சியான அப்டேட்களும் வழங்கப்படுகிறது.
புதிய 3D அம்சங்களோடு, பெரும்பாலான M.S பெயின்ட் அம்சங்களும் இந்த புதிய செயலியில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலியை பயன்படுத்தி, Cut மற்றும் Paste உள்ளிட்டவற்றை எளிமையாக செய்யலாம்.