3G தொழில்நுட்பத்துடன் கலக்க வருகின்றது Nokia 3310

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
95Shares
95Shares
lankasrimarket.com

நோக்கிய நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் Nokia 3310 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசியானது ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகைக்கு முன்னர் நோக்கியா நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பினைப் பெற்ற கைப்பேசி ஆகும்.

இந்நிலையில் Nokia 3310 கைப்பேசியின் மற்றுமொரு பதிப்பு அறிமுகம் செய்வது தொடர்பில் கடந்த மாதம் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி 3G தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாக குறித்த கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னர் 2G தொழில்நுட்பத்துடனேயே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இப் புதிய பதிப்பினை முன்பதிவு செய்யும் வசதி தற்போது ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 69.90 யூரோக்கள் பெறுமதியான இக் கைப்பேசியானது அடுத்த மாதம் முதல் சிப்பிங் செய்யப்படவுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்