மனதில் நினைத்தாலே கைப்பேசி இயங்கும்: மைக்ரோசாப்டின் புதிய தொழில்நுட்பம்

Report Print Kabilan in தொழில்நுட்பம்
159Shares
159Shares
lankasrimarket.com

மூளையின் மூலமாக கைப்பேசியில் இருக்கும் செயலிகளை கட்டுபடுத்துவதற்கான தொழில்நுட்பத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளது.

இனி நமது மனதில் நினைத்தாலே கைப்பேசி இயங்கும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம், மூளை மூலம் கணினியின் செயல்பாட்டை கட்டுபடுத்தும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை வாங்கியது, இதனை பெரிய புரட்சியாகவும் அறிவித்தது.

தற்போது, அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனமும் மூளையின் மூலமாக கைப்பேசியை கட்டுபடுத்தும் ‘Mind Control' தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை வாங்கியுள்ளது.

'Electro Encephalogramme' எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த ‘Mind Control' முறை செயல்படும். இது நமது மூளையில் ஏற்படும் மாற்றங்களை, முதலில் கவனமாக கருத்தில் கொள்ளும்.

அதன் பின்னர், நாம் என்ன நினைக்கிறோம் என்பதை கண்டுபிடித்து அனைத்து வேலைகளையும் எளிதாக செய்யும்.

பொதுவாக, நாம் எதை பார்த்தாலும் அதனைப் பற்றி மனதில் நினைப்போம். உதாரணமாக, நாம் யாருக்காவது ’Call' செய்ய வேண்டும் என்று கைப்பேசியை திறக்க நினைத்தால் போதும், தானாகவே அந்நபருக்கு ‘Call' சென்றுவிடும்.

அதேபோல, இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக பேஸ்புக்கில் Like செய்வது, வாட்ஸ் ஆப்பில் குறுந்தகவல் அனுப்புவது ஆகியவற்றை நாம் மனதில் நினைத்தபடியே செய்யலாம் என்று கூறுகிறார்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர்.

எனினும், இந்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த பயிற்சி பெற வேண்டும். இதற்காக தொழில்நுட்ப கருவி ஒன்றை வெளியிட மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அக்கருவிக்கு, நாம் மனதில் எப்படியெல்லாம் நினைப்போம் என்று பழக்கப்படுத்தினால் போதும், அதுவே சில நாட்களில் நாம் சொல்வதை எல்லாம் கேட்க தொடங்கிவிடும்.

அடுத்த சில மாதங்களில் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் என்று இந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்