மைதானம் தரமானதாக இல்லை: பிரபல வீராங்கனை குற்றச்சாட்டு

Report Print Fathima Fathima in ரெனிஸ்
99Shares
99Shares
lankasrimarket.com

உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான போட்டியில் பிரான்சின் கிறிஸ்டினா மெலடனோவிக் அமெரிக்காவின் அலிசால் ரிஸ்கியும் மோதினர்.

இதில் கிறிஸ்டினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார், இதன்பின்னர் அவர் அளித்த பேட்டியில், கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடந்த மைதானம் தரமானதாக இல்லை.

புற்களை சரியாக பராமரிக்காததால் மைதானம் வழுக்கும் தன்மையுடன் இருக்கிறது, மைதானத்தின் ஒரு பக்கத்தில் பெரிய துளை இருந்தது.

வெயிலும் அதிகமாக இருந்ததால் அனைத்தும் வறண்டு போனது, காயம் அடையாமல் போட்டியை முடித்ததே அதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் மைதானம் விளையாடுவதற்கு ஏற்றது தான் என விம்பிள்டன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments