விம்பிள்டன் தொடரிலிருந்து ரபேல் நடால் வெளியேற்றம்: வரலாறு படைத்தார் பெடரர்

Report Print Basu in ரெனிஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்றில் கில்லஸ் முல்லரிடம், ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், லக்சம்பார்க் வீரர் கில்ஸ் முல்லருடன் மோதினார்.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில், முல்லர் 6-3, 6-4, 3-6, 4-6, 15-13 என்ற செட் கணக்குகளில் ரபேல் நடாலை தோற்கடித்தார்.

இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே விம்பிள்டன் தொடரிலிருந்து தொடர்ந்து 6வது ஆண்டாக நடால் வெளியேறி இருக்கிறார்.

அதே சமயம் விம்பிள்டன் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு சுவிட்சர்லாந்து நட்சத்திரம் ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார்.

இதன் மூலம் விம்பிள்டன் தொடரில் 15 முறை காலிறுதிக்கு முன்னேறிய ஒரே வீரர் என்ற தனிப் பெருமையை ரோஜர் பெடரர் பெற்றுள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments