வெற்றி மேல் வெற்றி: குதூகலத்தில் ரோஜர் பெடரர்

Report Print Arbin Arbin in ரெனிஸ்
126Shares
126Shares
lankasrimarket.com

ரோஜர்ஸ் கிண்ணம் டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ரோஜர் ஃபெடரர், 16 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

ரோஜர்ஸ் கிண்ணம் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார். தொடரின் இரண்டாம் நிலை வீரரான ஃபெடரர், அரையிறுதியில் பிரான்சின் ராபின் ஹாசேவை 6-3, 7-6 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.

இதன் மூலம் தொடர்ந்து 16 போட்டிகளில் ஃபெடரர் வெற்றியை வசமாக்கியுள்ளார்.

நடப்பு ஆண்டில் மட்டும் 6 முறையாக இறுதிப் போட்டிக்கு அவர் முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் உடன் ஃபெடரர் பலப்பரீட்சை நடத்துகிறார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்