செரீனா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்

Report Print Fathima Fathima in ரெனிஸ்
267Shares
267Shares
lankasrimarket.com

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

சிறுவயதில் தன்னுடைய உடலமைப்பு ஆணை போன்று இருந்ததால் பல்வேறு அவமானங்களை சந்தித்ததாக கூறும் செரீனா, தன்னுடைய மகளும் அதேபோன்று இருப்பதால் கவலைப்படுகிறாராம்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

அன்புள்ள அம்மா,

எனக்கு தெரிந்த வலிமையான பெண் நீ, இதோ என் மகள், இவளும் என்னைப் போன்றே வலிமையான கை, கால்களை பெற்றிருக்கிறாள்.

15 வயது தொடங்கி நான் சந்தித்த சவால்களை அவளும் சந்திக்க போகிறாள், எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை.

என்னை பார்த்து பலரும் ஆண் என்றனர், போதைப்பொருள் உட்கொள்கிறேன் என்றனர்.

வலுமையான உடலமைப்பு இருப்பதால் ஆண்கள் பிரிவில் போட்டியிட வேண்டும் என்றனர்.

ஆனால் நான் இதை பெருமையாத்தான் பார்க்கிறேன், உயரமோ, குள்ளமோ, வளைவுகளுடன் கூடிய உடலோ அல்லது வலிமையான தசைகளை கொண்ட உடலோ அனைத்தும் ஒன்று தான்.

நாங்கள் பெண்கள், அதை பெருமையாகவும் கருதுகிறோம், அவ்வளவு தான்.

நான் சந்தித்த சவால்களை எதிர்கொண்டு அனைத்து கஷ்டங்களையும் சகித்துக் கொள்ளும் மனோபாவத்தை பெறுவதற்கு நீங்கள் தான் முன்மாதிரியாக இருந்தீர்கள்

என்னுடைய மகளுக்கும் நான் அதை கற்பிக்க விரும்புகிறேன், நீ என்னுடன் இருப்பாய் என நம்பிக்கை கொடு என எழுதியுள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்