அவுஸ்ரேலிய ஓபன்- வெற்றிக் கிண்ணத்தை வென்றார் சுவிட்ஸர்லாந்து வீரர் ரொஜர் பெடரர்

Report Print Thayalan Thayalan in ரெனிஸ்
அவுஸ்ரேலிய ஓபன்- வெற்றிக் கிண்ணத்தை வென்றார் சுவிட்ஸர்லாந்து வீரர் ரொஜர் பெடரர்
0Shares
0Shares
lankasri.com

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு சம்பியன் கிண்ணத்தை சுவிட்ஸர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார்.

ரொட் லவர் அவுஸ்ரேலிய அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், குரோஷிய வீரர் மரின் சிலிக்கை எதிர்கொண்ட ரொஜர் பெடரர், 6:2, 6:7, 6:3, 3:6, 6:1, என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளார்.

ரொஜர் பெடரர் பெற்றுக் கொண்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் சம்பியன் பட்டமானது அவருடைய ஆறாவது அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் என்பதுடன் 20 ஆவது கிறான்ட்ஸ்லாம் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்