வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போரின் கவனத்திற்கு

Report Print Sujitha Sri in போக்குவரத்து
0Shares
0Shares
lankasrimarket.com

வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இதனடிப்படையில் இலகு ரக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும்.

தேவையான ஆவணங்கள்

ஆகக் குறைந்தது அடுத்துவரும் 06 மாதங்களுக்கேனும் செல்லுபடியானதாக உள்ள வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரம்.

விண்ணப்பதாரர் வெளிநாட்டவராயின் ஆகக் குறைந்தது ஒரு மாதகாலப் பகுதிக்கான வீசா அனுமதிப் பத்திரம்.

சாரதி அனுமதிப் பத்திரம் ஆங்கில மொழியில் இல்லாத பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு.

இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஒருவரிடமிருந்து 06 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ சான்றிதழ்.

வெளிநாட்டு தூதுவர் சேவைக்கு உரித்தான ஒருவராயின் அதனை உறுதி செய்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்படுகின்ற கடிதம்.

தேசிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட செல்லுபடியான கடவுச்சீட்டு.

கட்டண விபரம்
  • சாதாரண சேவை கட்டணம் - 2500 ரூபா
  • ஒருநாள் சேவை கட்டணம் - 3000 ரூபா

ஒருநாள் சேவையை தலைமையகத்தில் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு
Department of motor traffic head office,
No. 341, Alvitigala Mawatha, Colombo 05,
Narahenpita.

Phone no : +94 11 2694331, 2694332, 2694333, 2694334, 2694335, 2694336

Email : info@motortraffic.gov.lk

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்