இந்த கோவிலின் கண்ணாடி பிம்பத்தை வணங்கினால் பண மழை கொட்டுமாம்

Report Print Printha in சுற்றுலா
0Shares
0Shares
lankasrimarket.com

பெங்களூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் கட்டி சுப்பிரமணிய எனும் கோவில் தொட்டபல்லப்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோவில் முன்னொரு காலத்தில் புனிதப் பயணம் வரும் யாத்ரிகர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கியதால், இங்கு முற்காலம் தொட்டே வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பயணிகள் வருகின்றனர்.

இங்குள்ள தெய்வம் தமிழர்களின் தெய்வம் என்றும் பழங்கால நம்பிக்கைகள் உள்ளது. மற்ற கோவில்களை போன்றே இந்த கோவில்களிலும் விழாக்கள் நடத்தப்படுகிறது.

இந்த ஆலயத்தின் தனித்துவம் என்றால், அது சுப்பிரமணிய சாமியும், லக்ஷ்மி நாராயணனும் முதன்மை கடவுள்களாக இருப்பது தான்.

அதுவும் ஒரே கல்லில் கிழக்கு பார்த்தவாறு சுப்பிரமணிய சாமி சிலையும், மேற்கு பார்த்தவாறு லக்ஷ்மி நாராயண சாமி சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சாமி நேரடியாக காட்சி தர, மேற்கு பார்த்து காணப்படும் லக்ஷ்மி நாராயண சாமியை கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின் மூலமே தரிசிக்க முடியுமாம்.

இந்த பிம்ப தரிசனத்தை ஒழுங்காகச் செய்தால் தொழில் முன்னேற்றமடைந்து, அவர்கள் நாராயணரின் அருளால் கோடீஸ்வரனாகும் யோகம் கிடைக்கும் என்றும் அதை இங்குள்ள பக்தர்கள் பலர் அனுபவித்துள்ளதாக கூறுகின்றனர்.

இந்த கோவிலில் உள்ள இத்தகைய புதுமையை காணவும், திருவிழாக்களில் கலந்து கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து தரிசித்து செல்கின்றனர்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்