இங்கிலாந்தில் 2018 மார்ச் 01 க்குப் பின்னர் 10 பவுண்ஸ் நாணயத்தாள் பயன்படுத்தமுடியாது

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
இங்கிலாந்தில் 2018 மார்ச் 01 க்குப் பின்னர் 10 பவுண்ஸ் நாணயத்தாள் பயன்படுத்தமுடியாது
0Shares
0Shares
lankasrimarket.com

சார்ல்ஸ் டார்வினின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட 10 பவுண்ஸ் நாணயத்தாள், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் வங்கிகளில் ஏற்றுக் கொள்ளப்படாது என இங்கிலாந்து வங்கி அறிவித்துள்ளது.

அதற்கேற்ப பிரித்தானிய பெண் எழுத்தாளர் ஜேன் ஒஸ்டினின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட பிளாஸ்ரிக் பத்து பவுண்ட் பணத்தாள், 2018ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி முதல் சட்ட ரீதியானதாக்கப்படவுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் காணப்பட்ட சார்ல்ஸ் டார்வினின் ஒளிப்படம் பொறிக்கப்பட்ட பத்து பவுண்ட் பணத்தாள்களே இவ்வாறு தடை செய்யப்படவுள்ளன. இதற்கு முன்னர் பழைய 5 பவுண்ஸ் நாணயத்தாளின் புழக்கம் கடந்த மே மாதம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், குறித்த புதிய 5 மற்றும் 10 பவுண்ட் பணத்தாள்கள் விலங்கு கொழுப்பில் தயாரிக்கப்படுவதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்