”எச்சரிக்கை” தன் மகனின் கடைசி நிமிட வீடியோவை வெளியிட்ட தாயின் உருக்கமான வேண்டுகோள்

Report Print Jubilee Jubilee in பிரித்தானியா
890Shares
890Shares
lankasrimarket.com

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு மத்தியில் அமைந்துள்ள Isle of Man என்ற பகுதியை சேர்ந்தவர் Beverley Clark. இவரது மகன் Lewis Clark (22) கடந்த 2015 ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் திகதி பைக் விபத்தில் உயிரிழந்தார்.

பைக் பிரியரான Lewis Clark, கடந்த ஆண்டு வெஸ்ட்யார்க்சைர் (West Yorkshire) என்ற மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, துரதிர்ஷ்டவசமாக எதிரே வந்த, பைக்கில் மோதியதால், நெருப்பு பற்றி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு எதிரே வந்து மோதியவர் ஜேர்மன் நாட்டை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அவர் பின்னே சென்றவரின் பைக்கிலிருந்த கமெரா வீடியோ எடுத்துள்ளது. தற்போது அந்த வீடியோவை Lewis Clark ன் தாய் வெளியிட்டு, என் மகன் இறப்பு அனைத்து பைக் ரைடர்களுக்கும் ஒரு எச்சரிக்கை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இவரது தாயார் Beverley Clark கூறுகையில், புன்னகையோடு வீட்டை விட்டு வெளியே சென்ற Lewis Clark, வீடு திரும்பும் போது ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு வந்தான் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments