எதிர்பாராத விதமாக தாமாகவே குழந்தையை ஈன்றெடுத்த தாய்: சிசிடிவியில் பதிவான வீடியோ!

Report Print Basu in பிரித்தானியா
910Shares
910Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற பெண் அவராகவே தனது குழந்தையை ஈன்றெடுத்துக்கொண்ட அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

Scunthorpe பகுதியை சேர்ந்து ஜெஸிக்கா ஸ்டப்பின்ஸ் என்ற பெண்ணே அவராகவே தனது குழந்தையை ஈன்றெடுத்துள்ளார்.

சம்பவத்தின் அன்று ஜெஸிக்காவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது, இதை அடுத்து அவரது கணவர் டாம் ஜெஸிக்கா வழக்கமாக செல்லும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனை வாயிலில் அவரை இறக்கிவிட்டு, அவரது கணவர் டாம் காரை நிறுத்த சென்றுள்ளார். அப்போது மருத்துவமனை வரவேற்பறையில் நடந்து வருகையில் வலி அதிகமாகி தாமாகவே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஜெஸிக்கா.

குறித்த காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளன.

அவர்கள் குடும்பத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது ஜெஸிக்கா நடந்தவற்றை விவரிக்கையில், அந்த நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று தனக்கு தெரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கணவர் டாம் பேசுகையில், வந்ததும் உட்கார கூட நேரமில்லாமல் இரண்டு நிமிடங்களில் குழந்தை பிறந்ததை எண்ணி ஆச்சர்யம் அடைந்தேன் என கூறியுள்ளார்.

முன்னதாக டாம், ஜெஸிக்கா தம்பதிகளுக்கு பென்னி என்ற பெண் குழந்தை உள்ளது, தற்போது இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு லூசி என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments