பிரித்தானியா நாட்டிற்கு மேலும் ஒரு பெருமை! என்ன தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானியாவின் Walesல் அமைந்திருக்கும் Barafundle Bay கடற்கரையை உலகின் சிறந்த கடற்கரைகளுள் ஒன்றாக பிரபல Passport Magazine பத்திரிக்கை தேர்ந்தெடுத்துள்ளது.

Passport Magazine பல விடயங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை வெளியிடும்.

அதன்படி தற்போது உலகில் உள்ள சிறந்த 25 கடற்கரைகள் பட்டியலில் Barafundle Bay -யும் இடம்பிடித்துள்ளது.

’அளவுக்கு அதிகமான அழகுகாட்சிகள்’ கொண்ட கடற்கரை என இந்த கடற்கரை வர்ணிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு Wales பகுதியில் அமைந்திருக்கும் இந்த கடற்கரையில் உணவகங்கள், கடைகள் போன்றவைகள் எல்லாம் கிடையாது.

ஆனாலும் இதன் அட்டகாசமான இயற்கை அழகு தான் Barafundle Bay கடற்கரையை உலக புகழடைய செய்துள்ளது.

பல்வேறு நாடுகளிலிருந்து இந்த கடற்கரையை காண சுற்றுலா பயணிகள் அனுதினமும் வருவது கூடுதல் சிறப்பாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments