ஐரோப்பிய நாடுகளில் வாகனம் ஓட்டும் பிரித்தானியர்கள் கவனிக்க

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர் வெளிநாடுகளில் வாகனம் ஓட்டும் பிரித்தானியர்களின் நிலை மேலும் சிக்கலில் உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களான Paris, Lyon and Grenoble உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் எனில் அந்த நாடு பரிந்துரைத்துள்ள மாசு கட்டுப்பாடு தர சான்றிதழ் ஸ்டிக்கர்களை வாகனத்தில் பதிக்க வலியுறுத்தி உள்ளனர்.

குறித்த தர சான்றிதழ் ஸ்டிக்கரானது €4.18 கட்டணத்தில் இணையத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். குறித்த சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு இழப்பீடு கட்டணமாக €135 வசூலிக்கப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.

ஜேர்மனியில் வெளிநாட்டு சாரதிகளை கவர்ந்திழுத்த சுங்க கட்டணமில்லாத சாலை பயன்பாடு மற்றும் மட்டுப்படுத்தப்படாத வாகன வேகம் உள்ளிட்டவைகளை அந்த நாட்டு அரசு மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் போலவே வெளிநாட்டு வாகன சாரதிகள் ஜேர்மனியிலும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கென வாகனத்தின் தரத்தை கணக்கில் கொண்டு 10 நாளுக்கான கட்டணமாக €5 ல் இருந்து €15 கட்டணமாக வசூலிக்க உள்ளனர். இதேபோன்று அவுஸ்திரியாவிலும் 10 நாள் கட்டணமாக €8.90 வசூலிக்கின்றனர்.

ஆனால் இலவச பயண சேவையை பிரித்தானிய பயணிகள் அனுபவிக்க வேண்டும் எனில் ஸ்பெயின் நாட்டுக்கே செல்ல வேண்டும். அங்குள்ள புறநகர் ரயில்களில் இலவச பயணத்தை பிரித்தானிய பயணிகள் மேற்கொள்ள வழிவகை செய்துள்ளனர்.

பயணிகளின் பயணச் சீட்டில் Combinado Cercanías எனும் வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கும் எனில் புறநகர் ரயில் பயணங்களை இலவசமாக மேற்கொள்ளலாம்.

ஆனால் இந்த இலவச சேவையை பயன்படுத்த வேண்டும் எனில் உங்கள் பயணச் சீட்டானது RENFE வாயிலாக நேரடியாக முன்பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments