உதவி என்ற பெயரில் பாலியல் தாக்குதல்: பிரித்தானியாவில் ஊனமுற்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் ஊனமுற்ற இளம் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் பாலியல் சித்திரவதை அனுபவித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்டபரி செல்லும் ரயிலிலே இச்சம்பவம் நடந்துள்ளது. ரயிலில் பயணித்த 24 வயதான ஊனமுற்ற பெண்ணின் பயணப்பெட்டிகளை சரியாக வைக்க மர்ம நபர் ஒருவன் உதவி செய்துள்ளான்.

பின்னர், அவன் அப்பெண்ணிற்கு அருகே அமர்ந்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளான். தனது இயலாமையால் அவனிடமிருந்து தப்பிச் செல்ல முடியாத நிலையில் சிக்கியுள்ளார் அப்பெண்.

இறுதியில் பெண் அவனை எதிர்கொண்டுள்ளார். ஆனால், அவன் வெஸ்டபரி நிலையத்தில் ரயில் நின்ற போது இறங்கி தப்பிச்சென்றுள்ளான்.

இச்சம்பவத்தினால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஊனமுற்ற பெண் பிரிட்டிஷ் போக்குவரத்து பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இந்நியைில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், நபரை குறித்த தகவல் அறிந்தவர்கள் தொடர்புக்கொள்ளும் படி அறிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments