பணத்திற்காக இறந்த குழந்தையுடன் நாடகமாடிய பெற்றோர்: 14 ஆண்டுகள் சிறை?

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய நாட்டில் உயிரிழந்த குழந்தை மூலம் பணம் பெற நாடகமாடிய பெற்றோருக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் Jeffrey Wiltshire(52) மற்றும் Rosalin Baker(25) என்ற தம்பதி வசித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 16 வாரங்களான அக்குழந்தை எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

குழந்தையின் உடலில் 40 இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. குழந்தை உயிரிழந்து விட்டதை அறிந்த பெற்றோர் இதன் மூலம் அரசாங்க உதவி தொகை பெற திட்டமிட்டுள்ளனர்.

பின்னர், லண்டன் நகர் பேருந்தில் குழந்தையின் சடலத்தை எடுத்துச்சென்றுள்ளனர். பேருந்து பயணத்தில் குழந்தை இறந்துவிட்டதாக நிரூபித்தால் அதன் மூலம் இழப்பீடு தொகை பெற முடியும் எனக் கூறப்படுகிறது.

பேருந்தில் பயணம் செய்த சில நிமிடங்களுக்கு பிறகு குழந்தை சுயநினைவின்றி கிடப்பது போல் தாயார் நாடகமாடியுள்ளார்.

சிலர் விரைவாக செயல்பட்டு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றுள்ளனர். ஆனால்,

குழந்தையின் உடலில் எவ்வித அசைவு இல்லாமலும் உடல் முழுவதும் குளிர்ச்சியாக இருப்பதை கண்டு அவர்கள் சந்தேகம் அடைந்து பொலிசாரிடம் புகார் கூறியுள்ளனர்.

மேலும், தாயார் பேருந்தில் ஏறியபோது அவரது கணவர் ‘ஜாக்கிரதையாக நடந்துக்கொள்’ எனக் கூறியது போன்ற உடல் பாவனை பேருந்தில் இருந்த கண்காணிப்பு கமெராவில் பதவியாகியுள்ளது பொலிசாருக்கு சந்தேகத்தை பலப்படுத்தியது.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில் நேற்று குழந்தை எவ்வாறு உயிரிழந்து என்பது பற்றி பெற்றோர் உண்மையை நீதிபதியிடம் கூறியுள்ளனர்.

எனினும், பெற்றோர் மீது நீதிபதிகள் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக, குழந்தையின் உயிரை காப்பாற்ற தவறியது மற்றும் பேருந்தில் குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடியது உள்ளிட்ட குற்றங்கள் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்குற்றங்கள் தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மே 28-ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும், 14 ஆண்டுகள் வரை பெற்றோருக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments