12 மணிநேர போராட்டம்: லண்டன் தீ விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட கண் தெரியாத முதியவர்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

லண்டன் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் கண் தெரியாத முதியவர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

லண்டனில் 27 மாடிகளை கொண்ட Grenfell Tower என்ற கட்டிடத்தில் உள்ள 11 வது மாடியில் 70 வயதுடைய முதியவர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இவருக்கு கண்பார்வை தெரியாது.

இந்நிலையில், இந்த கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் அந்த கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கண்தெரியாத முதியவர் எவ்வாறு தப்பித்து செல்வது என்பது தெரியாமல் தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் நின்றபடி கடவுளை வேண்டிக்கொண்டிருந்துள்ளார்.

தனது உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்த இந்த முதியவரை, சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தற்போது வரை 12 பேர் உயிரிழந்திருந்தாலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments